ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. மருத்துவமனை மருத்துவர்கள், நரம்பு மண்டலம் மற்றும் தசை மண்டலத்தை பாதிக்கவல்ல பாம்ப் நோய் (Pompe disease), ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி -1 (spinal muscular Atrophy-1) எனப்படும் தண்டுவடம் மற்றும் தசை மண்டலத்தை பாதிக்கக்கூடிய அரிய வகை நோய் ஆகியவற்றுக்கான சிகிச்சை முறையை தாங்கள் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உடல்நலம் குன்றிய குழந்தை ஒன்றுக்கு ஆக்ராவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, இம்மருத்துவமனைக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் குழந்தை அழைத்து வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்குழந்தைக்கு பாம்ப் நோய், ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி -1 ஆகிய இரண்டு அரிய வகை நோய்களும் இருப்பது கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த நோய்களுக்கான சிகிச்சைக்கு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வரை செலவாகக் கூடும் என்றும், அனுகம்பா உபி யோக் திட்டத்தின் மூலம் இதற்கான நிதியைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கட்டாய உறவு கொள்ளுதல் பெண்களின் மனநலனை பாதிக்குமா?