ETV Bharat / bharat

அமித் ஷா பிறந்தாநாள் அன்று ஜெகன் வைத்த கோரிக்கை! - Special status for andhra

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளான இன்று, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவரை நேரில் சந்தித்து ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தார்.

அமித் ஷா
author img

By

Published : Oct 22, 2019, 7:11 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆந்திர மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதில், ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதையடுத்து மற்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளைப் போல் ஆந்திர மாநில தொழில்துறையை உருவாக்குவதற்கும், வளர்ச்சி வழியில் செல்வதற்கும் சிறப்பு அந்தஸ்து தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடப்பாவில் கட்டப்பட்டுவரும் எஃகு ஆலை, ராமாயபட்டிணத்தில் கட்டப்பட்டுவரும் துறைமுகம், காக்கிநாடாவில் கட்டப்படும் கெமிக்கல் ஆலை ஆகிய பணிகளை முடிப்பதற்கு தேவையான நிதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கியமாக போலவரம் நீர்பாசனத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு அளிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு ஆதரவுளித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டுள்ள சம்பவம் பிற மாநிலத்தவரிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிக்கலாமே: ’நான் நல்லவனுக்கு நல்லவன்’ - ஜெகனை சாடிய சந்திரபாபு நாயுடு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.