ETV Bharat / bharat

ஐபிபிபி புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற ஜெ. வெங்கட் ராமு! - டெல்லி செய்திகள்

டெல்லி: இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) புதிய நிர்வாக இயக்குநராக ஜெ. வெங்கட் ராமு பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஐபிபிபி புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற ஜெ.வெங்கட் ராமு!

author img

By

Published : Jan 7, 2021, 10:53 PM IST

வங்கித் துறையின் பல்வேறு களங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம்பெற்ற ஜெ. வெங்கட்ராமு இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) புதிய நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக இயக்குநராகவும் இன்று (ஜன. 07) பொறுப்பேற்றுக்கொண்டார்.

வணிக மேலாண்மை, திறன்சார்ந்த செயல்திட்டம், கடன் முறைகள், டிஜிட்டல் நிதி சேவைகள், கொடுப்பனவுகள், கடன் அட்டைகள், மொபைல் பேங்கிங், வேலட் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஜெ. வெங்கட்ராமு ஐபிபிபியின் புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்பாரென கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி இந்திய அஞ்சல் துறை அறிவித்திருந்தது.

ஐபிபிபி புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற ஜெ.வெங்கட் ராமு!
ஐபிபிபி புதிய நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற ஜெ.வெங்கட் ராமு!

இந்திய அஞ்சல் துறையின் அறிவிப்பின் அடிப்படையில், ஜெ. வெங்கட்ராமு இன்று பொறுப்பேற்றார். ஹைதராபாத்தின் புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கணிதம், பொருளாதாரம் ஆகிய இரு பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்த அவர் கொல்கத்தா இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் நிர்வாக மேலாண்மை மேற்கல்வி பெற்றவர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அஞ்சல் துறைச் செயலாளரும், ஐ.பி.பி.பி. தலைவருமான பிரதீப்த குமார் பிசோய், “வங்கி தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆழமான புரிதல் கொண்ட ஜெ. வெங்கட் ராமுவின் வருகை ஐ.பி.பி.பியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான பயணத்தை விரைவுப்படுத்த உதவும்" என கூறினார்.

முன்னதாக, ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியில் தலைமை டிஜிட்டல் அலுவலராகவும், ஆக்சிஸ் வங்கியின் துணை துணைத் தலைவராகவும் ஜெ. வெங்கட் ராமு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒடிசா முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.