ETV Bharat / bharat

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு - லஷ்கர் பயங்கரவாதிகள் பலி - Jammu Kashmir Sangam encounter

ஜம்மு காஷ்மீர் அருகே ராணுவத்தினருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

JK encounter
JK encounter
author img

By

Published : Feb 22, 2020, 9:21 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் உள்ள சன்கம் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தீவிர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த சண்டையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை ட்வீட்
ஜம்மு காஷ்மீர் காவல்துறை ட்வீட்

நவீத் பட், ஆகிவிப் யாசின் பட் என்ற அந்த இருவரிடமிருந்து, ஏ.கே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்த என்கவுண்டர் தாக்குதலை, ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மத்திய பாதுகாப்புப் படை ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். இந்த தாக்குதல் நடவடிக்கையை ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகள் குறித்த கூடுதல் தகவல்கள் விசாரித்து விரைவில் வெளியிடப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலக நாடுகள் மத்தியில் பலம் பெறும் மோடி - பலன் பெறும் ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.