கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இருந்தபோதிலும் கரோனா வைரஸ் பரவல் அதிகமாவே உள்ளது. கரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி அமைப்புகள் தடுப்பூசி, மருந்துகளை கட்டுப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பல மாநில அரசுகள் பிளாஸ்மா என்னும் ஊநீர் சிகிச்சையை அளித்துவருகின்றன. அந்தவகையில், ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் (ஸ்கிம்ஸ்) கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன்முதலில் பிளாஸ்மா சிகிச்சை அளித்துள்ளது.
இது குறித்து ஸ்கிம்ஸ் மருத்துவர்கள் கூறுகையில், “இந்த முறையை உலகெங்கிலும் பல மருத்துவ நிர்வாகங்கள் கையில் எடுத்து வெற்றிக்கொண்டுள்ளன. அதன்படி ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் இந்த முயற்சியை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க...இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!