ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரிலுள்ள வழிபாட்டு தலங்களை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான வழிகாட்டு நெறிமுறையில், “பார்வையாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் பக்தர்கள் கோயிலிலுள்ள சிலைகள், புனித நூல்களை தொட அனுமதி கிடையாது. மேலும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதி வரை, வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரத்யேக கட்டுப்பாடு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியிலுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு தினந்தோறும் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆதலால் இந்தக் கோயிலில் பிரத்யேக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “தினந்தோறும் 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், தரிசனத்துக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சண்டி யாகம்