இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காஷ்மீருக்கான பிரத்யேக தனி கொடி இறக்கப்பட்டு, மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில அரசு அலுவலகங்களில் அம்மாநிலத்தின் தனி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
ஆனால், கூடிய விரைவில் அங்கு பறந்துகொண்டிருக்கும் தனி கொடியும் இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 31ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசமாக பிரியவுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அடிப்படையின் கீழ், அம்மாநிலத்திற்கு தனி கொடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.