நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. மத்திய, மாநில அரசுகள் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பலர் தங்களால் முடிந்த பணத்தை தற்போதும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர்.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, பிரதமர் நிவாரண நிதிக்கு மீண்டும் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை ஜே & கே வங்கி, மண்டல தலைமையகத்தின் தலைவர் ஆர்.கே. சிபரிடம் அவர் அளித்தார். ரவீந்தர் ரெய்னா ஏற்கனவே நான்கு முறை ஒரு கோடி ரூபாய் நிதியளித்துள்ளார்.
இதுகுறித்து ரவீந்தர் ரெய்னா கூறுகையில், "இந்தப் பணம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், மாணவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். பொது மக்களிடமும், கட்சி செயற்பாட்டாளர்களிடமிருந்து நன்கொடைகளாக பெறப்பட்டன. இதுவரை நன்கொடையாக 5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது பெருமை தருகிறது. இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும்" என்றார்.