ETV Bharat / bharat

கோவிட்-19: ‘பொதுமக்கள் வீட்டிலிருப்பது தான் சமூகத்துக்கு நல்லது’ - அமைச்சர் பேட்டி!

புதுச்சேரி: மாநிலத்தைப் பொறுத்தமட்டில் 60 விழுக்காடு தான் பொதுமக்களிடம் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

its-good-for-society-to-be-in-public-house-interview-with-the-minister

author img

By

Published : Mar 27, 2020, 12:22 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் பொதுவெளியில் நடமாட வேண்டாமென அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே சமுதாயத்திற்கும், அரசாங்கத்திற்கும் பொதுமக்கள் வீட்டில் இருப்பதுதான் நல்லது.

புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் 60 விழுக்காடு தான் பொதுமக்களிடம் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

‘பொதுமக்கள் வீட்டிலிருப்பது தான் சமுதாயத்திற்கு நல்லது’ - அமைச்சர் பேட்டி!

மேலும்,வியாபாரிகள் ஊரடங்கை பயன்படுத்தி காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை யாரும் தடுக்ககூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: கேரளாவில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.