இந்தியா குளோபல் வாரம் 2020, மூன்று நாள்கள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 30 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினர்.
மாநாட்டில் பலர் பேசிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் நவீன காலங்களில் பலதரப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, உலகளாவிய தொற்றுநோயைக் கையாள்வது குறித்து விவாதித்தார்.
அப்போது அவர், "இது பலதரப்பினருக்கு கடினமான நேரம். 1945 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து பெரிய சாதனைகளும் விபரீதமான ஒருதலைப்பட்ச அரசு நடத்தைகளால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன.
உலகளாவிய ஆளுகை திறம்பட செயல்பட்டிருந்தால், கரோனா வைரஸ் நெருக்கடி தோன்றியவுடன் எளிதாக நிவர்த்தி செய்திருக்கிலாம்” என்றார்.
இதையும் படிங்க : தாதா துபே என்கவுன்டர்: நீதிமன்ற விசாரணை கோரும் காங்கிரஸ்!