இந்தோ- திபெத்திய எல்லைப் படையின் 43ஆவது பட்டாலியனைச் சேர்ந்த சச்சின் யாதவ், சிம்லாவில் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது, திடீரென்று அவர் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே இரண்டு முறை சுட்டுக்கொண்டார்.
சத்தம் கேட்டு வந்த சகப்படை வீரர்கள், உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அவர் சிம்லாவில் உள்ள ஐஜிஎம்சியில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எல்லைப் படை வீரர், மகாராஷ்டிராவிலிருக்கும் தனது குடும்பத்தினரை சந்தித்துவிட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிந்து, ஓரிரு நாட்கள் முன்பு தான் பணிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.