கோவிட் -19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூ 20,000 கோடி மதிப்பில் பொருளாதாரத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். மறுபுறம் அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் அடுத்தகட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என செய்திகள் வெளியாகின. இது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில், இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சிவன் முதல் முறையாக இன்று (ஜூன் 24) காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்படுவது குறித்து அவர் விரிவாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உறுதி செய்துள்ளது.