ETV Bharat / bharat

கார்டோசாட் - 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! - கார்டோசாட் 3 செயற்கைக்கோள் இன்று காலை 9.30 மணிக்கு லான்ச்

அமராவதி: பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட் 3 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று காலை 9:28 மணிக்கு ஏவியது.

Cartosat 3, கார்டோசாட் 3
Cartosat 3
author img

By

Published : Nov 27, 2019, 9:12 AM IST

Updated : Nov 27, 2019, 10:01 AM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட் - 3 என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவியது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு ஏவப்பட்டது.

Satellite

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்குச் சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

பூமியைக் கண்காணிக்க, தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவிய கார்டோசாட்-3 செயற்கைக்கோள், மேம்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறை செயற்கைக்கோளாகும்.

எத்தனையோ பிரச்னை இருக்கு ... இப்போ இ-சிகரெட் தடை மசோதா தேவையா? - செந்தில்குமார்

இதில், பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் துல்லியமாகப் படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள், நகரத் திட்டமிடுதல், ஊரக வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கடற்கரை பரப்பு கணக்கிடலில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. கூகுள் மேப் உள்ளிட்டவற்றில் இதன் பங்கு இன்றியமையாதது.

1625 கிலோ கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 509 கி.மீ., உயரத்தில் புவி வட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டில் உள்ள மற்ற 13 நானோ வகை செயற்கைக்கோள்களில், 12 புவி கண்காணிப்பு வகை செயற்கைக்கோள்கள் ஆகும்.

இந்த ராக்கெட் கடந்த 25ஆம் தேதி காலை ஏவப்படுவதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று காலை 9.28 மணிக்கு ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ் எல் வகையில் 21ஆவது ராக்கெட் ஆகும். இஸ்ரோவால் இந்த வருடத்தில் ஏவப்படும் 5ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரனை ஆய்வு செய்ய காத்திருக்கும் சிலந்தி!

Intro:Body:ஊரக வளர்ச்சி மற்றும் நகர திட்டமிடுதல் ஆகியவற்றுக்காக உதவும் செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட் -3 செயற்கைக்கோளை இன்று விண்ணில் ஏவுகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளதில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு ஏவபட உள்ளது.

பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் 44 மீ உயரம் கொண்டது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை 3 ஆவது தலைமுறை செயற்கைக்கோளாகு. இதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள், நகர திட்டமிடுதல், ஊரக வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கடற்கரை பரப்பு கணக்கிடதலில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. கூகுள் மேப் உள்ளிட்டவற்றில் இதன் பங்கு இன்றியமையாதது.

1625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவை. இதில் 12 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு வகை செயற்கைக்கோள் ஆகும்.

இந்த ராக்கெட் கடந்த 25ம் தேதிக்கு காலை ஏவபடுவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று காலை 9.28 மணிக்கு தள்ளி வைக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ் எல் வகையில் 21-வது ராக்கெட் ஆகும். மேலும் இது இந்த வருடத்தின் 5 ஆவதாக ஏவப்படும் ராக்கெட் ஆகும்.

அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெற உள்ளது. Conclusion:
Last Updated : Nov 27, 2019, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.