ETV Bharat / bharat

கவுண்ட் டவுன் ஸ்டார்ட்... விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி-45 ராக்கெட் - emisat

சென்னை: நாளை விண்ணில் பாய தயாராகும் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-45 ராக்கெட்டுக்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது.

பிஎஸ்எல்வி-45
author img

By

Published : Mar 31, 2019, 1:05 PM IST

Updated : Mar 31, 2019, 1:32 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-45 ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்தவுள்ளது. இந்நிலையில் இதற்கான கவுண்ட் டவுண் இன்று அதிகாலை 6.37 மணிக்குத் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ ட்விட்,isro tweet
இஸ்ரோ ட்விட்

பிஎஸ்எல்வி-45 பயணம் எவ்வாறு?

  • ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை காலை சரியாக 9.27 மணிக்கு விண்ணில் பாயும்.
  • விண்ணில் பாய்ந்தவுடன், பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) எமிசாட் எனப்படும் மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோள் (EMITSAT - Electronic Intelligence Satellite) பூமியிலிருந்து சுமார் 749 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
  • பின்னர், ராக்கெட் கீழிறங்குகையில் பூமியிலிருந்து 504 கி.மீ. உயரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும்.
  • தொடர்ந்து, புவியிலிருந்து 485 கி.மீ. உயரத்தில் மூன்று செயற்கைகோள்கள் தாங்கும் தளமாக நிறுத்தப்படும்.
  • ராக்கெட் புறப்பட்ட நேரத்திலிருந்து அதன் செயல்பாடு 180 நிமிடங்களில் (சுமார் 3 மணிநேரம்) நிறைவடையும்.
    பிஎஸ்எல்வி-45
    பிஎஸ்எல்வி-45

இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன், "இது ஒரு முக்கியமான தருணமாகும். முதல்முறையாக விண்வெளியில் மூன்று வெவ்வேறு புவி வட்டப்பாதைகளில் ராக்கெட்டை ஏவ உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 31, 2019, 1:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.