சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து, பிரக்யான் ஆய்வூர்தியுடன் பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நள்ளிரவு 1:30 மணிக்கு நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்கப்படுகிறது.
இதனை எதிர்நோக்கி இந்தியர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் வேலையில், சந்திரயான் 2 விண்கலமும், விக்ரம் லேண்டரும் ஒன்றையொன்று பார்த்து பேசிக்கொள்வது போல சுவாரஸ்யமான கார்ட்டூன் ஒன்றை இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 2, விக்ரம் இடையேயான உரையாடல்:
சந்திரயான் 2 : இத்தனை தூரம் உன்னுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி விக்ரம்.
விக்ரம் : உங்களுடன் பயணித்தில் எனக்கு மிகழ்ச்சி. உங்களைப் பிறகு சந்திக்கிறேன்.
சந்திரயான் 2: வாழ்த்துக்கள் விக்ரம். தென் துருவத்தை விரைவில் சென்றடைவாய் என்று நம்பிகிறேன்.
இந்த கார்டூனை நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுவருகின்றன.