ETV Bharat / bharat

செவ்வாய் கிரகத்தின் சந்திரன்- போபோஸின் புகைப்படம் வெளியீடு!

author img

By

Published : Jul 5, 2020, 2:15 AM IST

பெங்களூரு: செவ்வாய் கிரகத்தின் மிக நெருக்கமான மற்றும் மிகப்பெரிய சந்திரனான போபோஸின் படத்தை இஸ்ரோவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷனின், மார்ஸ் கலர் கேமரா (எம்.சி.சி) புகைப்படம் எடுத்துள்ளது.

போபோஸின் புகைப்படம்.
போபோஸின் புகைப்படம்.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 2013ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் தேதியன்று, இஸ்ரோ தனது மங்கல்யான் விண்கலத்தை ஏவியது. இது 2013 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகியது.

ரூ.450 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷனின் பணி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு மற்றும் கனிம கலவை ஆகியவற்றை குறித்து ஆய்வுசெய்வதோடு, அங்கு மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறு, அதன் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு வடிமைக்கப்பட்டது.

செப்டம்பர் 24, 2014 அன்று, செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் விண்கலத்தைக் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவின் இஸ்ரோ தனது முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் ஏவி, செவ்வாய்க் கிரகத்தின் நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.

மங்கல்யான் என்று அழைக்கப்பட்ட இதன் ஆயுட்காலம் ஆறு மாதங்கள் தான் என்று கணிக்கப்பட்ட நிலையில், மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் பல ஆண்டுகள் செயல்படுவதற்குரிய போதுமான எரிவாயு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், ஜூலை ஒன்றாம் தேதியன்று செவ்வாய் கிரகத்தில் இருந்து ஏழாயிரத்து 200 கி.மீ தொலைவிலும், போபோஸிலிருந்து நான்காயிரத்து 200 கி.மீ தூரத்திலும் இருந்தபோது, செவ்வாய் கிரகத்தின் சந்திரன் என்று அழைக்கப்படும் போபோஸின் படத்தை, மார்ஸ் கலர் கேமரா (எம்.சி.சி) மூலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. போபோஸ், கார்பனேசிய காண்டிரைட்டுகளால் ஆனது என்று நம்பப்படுகிறது.

"இது ஆறு மார்ஸ் கலர் கேமரா ஃப்ரேம்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு படம் என்றும், இதில் வண்ணங்கள் சரி செய்யப்பட்டுள்ளன" என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், போபோஸின் மிகப்பெரிய பள்ளத்தாக்கான ஸ்டோக்னி மற்றும் பிற பள்ளங்களான (ஷ்க்லோவ்ஸ்கி, ரோச் & கிரில்ட்ரிக்) இந்தப் படத்தில் காணப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மார்ஸ் ஆர்பிட்டரில் ஐந்து அறிவியல் கருவிகள் உள்ளன. லைமன் ஆல்பா ஃபோட்டோமீட்டர் (எல்ஏபி), செவ்வாய் கிரகத்திற்கான மீத்தேன் சென்சார் (எம்எஸ்எம்), மார்ஸ் எக்ஸோஸ்பெரிக் நியூட்ரல் காம்போசிஷன் அனலைசர் (மென்கா), மார்ஸ் கலர் கேமரா (எம்சிசி) மற்றும் வெப்ப அகச்சிவப்பு இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்பதே இந்த ஐந்து அறிவியல் கருவிகளாகும்.

இதையும் படிங்க: கூகுளின் பிரத்யேக கீபோர்டான 'ஜிபோர்டு' தற்போது பீட்டா பதிப்பில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.