ETV Bharat / bharat

பி.எஸ்.எல்.வி. வரலாற்றில் 50ஆவது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி சாதித்த இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம், பி.எஸ்.எல்.வி. வரலாற்றில் ஐம்பதாவது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதித்துள்ளது.

ISRO has successfully implemented the Fifth Plan in PSLV 50th vechicle

author img

By

Published : Dec 11, 2019, 6:57 PM IST

Updated : Dec 11, 2019, 10:33 PM IST

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று மாலை 3:25 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்பட்ட ரிசாட் 2 பிஆர் 1 உள்பட 10 செயற்கைக்கோள்களும் சரியாக 21:19 நிமிடத்தில், திட்டமிட்ட நேரத்தில் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

இதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில், “பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தனது 26ஆம் ஆண்டு பயணத்தில் 1.1 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களைக் கொண்டுசெல்லும் அளவுக்கு அதன் செயல்திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி பூமியிலிருந்து 576 கிலோமீட்டர் உயரத்தில் ரிசாட் 2 பிஆர் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 26 ஆண்டுகள் பயணத்தில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இந்தளவிற்கு செயல்திறன் மிக்கதாக மாற்றியதில் இதற்கு முன் இஸ்ரோவில் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் குழு, ஒட்டுமொத்த பிஎஸ்எல்வி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்குள்ளது.

பி.எஸ்.எல்.வி. வரலாற்றில் ஐம்பதாவது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது

அதனால் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், சீனிவாசன் உள்பட இஸ்ரோவின் தலைவர்களாக இருந்த அனைவரையும் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கிறேன். பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டின் மொத்த எடையில், 56 விழுக்காடு எடை வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களுக்கு கொடுக்கப்பட்டது. இஸ்ரோவின் வரலாற்றில் இது புதிய மைல்கல் என்று சொன்னாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

நிலவு, செவ்வாய் ஆகியவற்றை ஆராய்ந்த நாம் விரைவில் சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக நமது ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும். இந்தாண்டுக்கான ராக்கெட் ஏவுதல் பணிகள் அனைத்தும் முடிந்தது. இனி 2020ஆம் ஆண்டில் செலுத்தவுள்ள பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. என அனைத்து ராக்கெட்டுகளையும் வெற்றிகரமாகச் செலுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த சிவன், பி.எஸ்.எல்.வி. -50 என்கிற நூலையும் வெளியிட்டார்.

இதையும் படிங்க: பூமியை உளவு பார்க்க தயாராகும் பிஎஸ்எல்வி-சி 48

Intro:Body:பி.எஸ்.எல்.வி வரலாற்றில் ஐம்பதாவது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது இஸ்ரோ

பி.எஸ்.எல்.பி சி- 48 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று மாலை 3:25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்பட்ட ரிசாட் 2 பி ஆர் 1 உள்பட 10 செயற்கைக் கோள்களும் சரியாக 21:19 நிமிடத்துக்கு திட்டமிட்ட நேரத்தில் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் பேசுகையில்,

பிஎஸ்எல்வி ராக்கெட் தனது 26 ஆம் ஆண்டு பயணத்தில் 1.1 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை கொண்டு செல்லும் அளவுக்கு அதன் செயல்திறன் அதிக படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பூமியிலிருந்து 576 கிலோமீட்டர் உயரத்தில் ரிசாட் 2 பி ஆர்1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 26 ஆண்டுகள் பயணத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் இந்த அளவிற்கு செயல்திறன் மிக்கதாக மாற்றியதில் இதற்கு முன் இஸ்ரோவில் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் குழு, ஒட்டுமொத்த பிஎஸ்எல்வி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது. அதனால் இந்த தருணத்தில் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், சீனிவாசன் உட்பட இஸ்ரோவின் தலைவர்களாக இருந்த அனைவரையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன், நன்றி தெரிவிக்கிறேன். பிஎஸ்எல்வி சி 48 ராக்கெட்டின் மொத்த எடையில் 56 சதவீத எடை வெளி நாடுகளின் செயற்கைக்கோள்கள் கொடுக்கப்பட்டது இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சொன்னாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. நிலவு செவ்வாய் ஆகியவற்றை ஆராய்ந்த நாம் விரைவில் சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா வின்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. எஸ் எஸ் எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும். இந்த ஆண்டுக்கான ராக்கெட் ஏவுதல் பணிகள் அனைத்தும் முடிந்தது. இனி 2020ஆம் ஆண்டில் செலுத்த உள்ள பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ் எஸ் எல் வி அனைத்து ராக்கெட் களையும் வெற்றிகரமாக செலுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த சிவன், பிஎஸ்எல்வி ரக 50 ஆவது ரக பி.எஸ்.எல்.வி - 50 என்கிற புத்தகத்தையும் வெளியிட்டார்

Conclusion:
Last Updated : Dec 11, 2019, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.