ETV Bharat / bharat

கரோனா காலத்தில் பல் மருத்துவரை சந்திப்பது ஆபத்தா... மருத்துவரின் பதில்! - good to check dentist during corona timw

பற்களில் வலி ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். கரோனா காலத்தில் முறையான வழிகாட்டுதல் மருத்துவமனையில் பின்பற்றப்படுவதால் மக்கள் பயமின்றி சிகிச்சைக்கு செல்லலாம் என பல் மருத்துவர் ஹிமாலி காமத் தெரிவிக்கின்றார்.

en
end
author img

By

Published : Oct 9, 2020, 3:05 AM IST

பற்களின் முக்கியத்துவத்தை அனைவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும். எந்த வலி வேணாலும் வரலாம்... பல் வலி மட்டும் வரக்கூடாது என பலர் சொல்வார்கள்.

ஏனென்றால், பல் வலி நம்மை பாடாய்படுத்தி எடுத்துவிடும். வலி வந்த பிறகு பல் மருத்துவரை சந்திப்பதை விட, அவ்வப்போது சந்தித்து பற்கள் மற்றும் சுற்று பகுதிகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்வது அவசியம்.

ஆனால், தற்போது கரோனா காலக்கட்டத்தில் மருத்துவரை சந்திப்பது நல்லதா போன்ற பல்வேறு வகையான அச்சத்துடன் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இதுதொடர்பாக தெளிவுபடுத்த பல் மருத்துவர் ஹிமாலி காமத் அணுகினோம்.

பற்களில் ஏற்படும் வலியை பலரால் எளிதில் கண்டறிய முடியாது. தலைவலியா, காது வலியா, பல் வலியா என்ற குழப்பத்திலே பலரும் இருப்பார்கள்.

பல்சுழற்சி மற்றும் பல் புண்கள் மிகவும் துன்பகரமானவை. அதே போல், பற்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்பட்டு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

இத்தகைய நிலைகளில் நிச்சயமாக மருத்துவரை சந்தித்தாக வேண்டும். பற்களில் ஏற்பட்ட ஒட்டைகளை அடைக்கவும், மஞ்சள் நிறத்தில் மாறியுள்ள பற்களை சுத்தம் செய்யவும், பல் விழுந்த இடத்தில் மாற்று பற்களை கட்டுவதற்கு மக்கள் பெரும்பாலானோர் வருவது வழக்கம்.

கரோனா காலத்தில் பல் மருத்துவரை நேரடியாக சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லதா என்ற கேள்வி பலரின் மனதில் ஓடுகிறது.

எளிதில் கரோனா பரவும் அபயம் உள்ளதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்காக பல் வலியை எளிதாகவும் நினைத்துவிட கூடாது. கரோனா காலத்தில் நோயாளிகளின் பாதுகாப்புக்காக பல் மருத்துவனையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நோயாளிக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பு, எதேனும் அறிகுறிகள் உள்ளதாக என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காத்திருக்கும் நேரம் அல்லது காத்திருப்பு அறையில் மற்றவர்களுடனான தொடர்பு குறைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நோயாளி வருகைக்கு பிறகு அனைத்து இடங்களும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு நோயாளியும் மருத்துவமனைக்கு வரும் போது 30 நொடிகள் குளோரெக்சிடைன் உபயோகித்து வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால், 2 மணி நேரத்தில் வாய் வழியாக நோய் தொற்று பரவும் அபாயம் இருக்காது.

நோயாளிக்கு பயன்படுத்திய கருவிகள் ஹைபோகுளோரைட் கரைசலில் ஊறவைக்கப்படுகின்றன. மருத்துவர்கள் முழு கவச பாதுகாப்பு உடை அணிந்து கொள்வது அவசியம்.

மற்றவர்களுக்கு பல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். எதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரை செய்யுங்கள்.

தினமும் பிரஷ் செய்ய வேண்டும்.

வலி வீக்கம், ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மூக்கு அல்லது கன்னத்தின் அருகே ஏதேனும் தேவையற்ற வீக்கம் இருந்தால் பரிசோதிக்க வேண்டும்.

அவசர பல் வருகையை விட திட்டமிடப்பட்ட வழக்கமான சோதனை சிறந்தது.

ஆய்வுகளின் படி, பல் மருத்துவ சிகிச்சை முறையால் கரோனா பரவும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

ஏனெனில் கோவிட் 19 வருவதற்கு முன்பே நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இப்போது மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இது உங்கள் சொந்த பாதுகாப்புக்காக என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.