ETV Bharat / bharat

தனியார்மயமாக்கலை நோக்கி செல்லும் ரயில்வேதுறை! - இந்தியன் ரயில்வே

டெல்லி: இந்தியாவில் ஐந்து விழுக்காடு ரயில்களை இயக்க மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே
ரயில்வே
author img

By

Published : Jul 7, 2020, 1:33 AM IST

நாடு முழுவதும் 151 பயணிகள் ரயிலை, 109 பாதைகளில் இயக்குவதற்காக தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி அழைப்பு விடுத்தது.

ரயில்வேயை தனியார்மயமாக்கலை நோக்கி இட்டு செல்லும் மிகப்பெரிய அறிவிப்பு இது. இதன்மூலம், ரயில்வேதுறையில் தனியார் நிறுவனம் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பராமரிப்பு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ரயில்வேதுறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், பயண நேரத்தை குறைத்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல், பாதுகாப்பை உறுதிப்படுத்தல், சிறப்பான பயண அனுபவத்தை அளித்தல், தேவை விநியோக பற்றாக்குறையை குறைத்தல் ஆகியவை இதன் நோக்கங்களாக உள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ரயில்வே துறையை தனியார்மயமாக்க உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டபோது அது கடினமாகவே இருந்தது. குறிப்பாக, பிரிட்டனில் அரசிடமிருந்த ரயில்வேதுறை 1993ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களிடம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது.

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்வேறு பாதைகளில் ரயிலை இயக்கும் நோக்கில் அதற்கான கட்டமைப்பு பிரிக்கப்பட்டது. ஆனால், இந்நடவடிக்கைகள் முழுவதுமாக தோல்வியை தழுவியது.

இந்தியாவில் ஐந்து விழுக்காடு ரயில்களை இயக்க மட்டுமே தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார்மயமாக்கல் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.