டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளே பங்கேற்றுள்ளனர்.
மத்திய அரசுடன் விவசாயிகள் பலமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் சீக்கியர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புத்தகத்தின் மின்னணு பிரதியை சீக்கிய மக்களுக்கு மெயில் அனுப்பியுள்ளது.
சிங் எனப் பெயர்கொண்டுள்ள சுமார் 2 கோடி பேருக்கு இந்த மெயில் அனுப்பப்பபட்டுள்ளதாகத் தெரிகிறது. ஐஆர்சிடிசியின் இந்தச் செயலுக்கு மக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும் மத்திய அரசு இதுபோன்ற அரசுத் துறைகளைத் தங்களது தேர்தல் பரப்புரைக்காகபர் பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில் ஐஆர்சிடிசி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், சீக்கியர்களுக்கு அனுப்பப்பட்ட மெயில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று மெயில் அனுப்புவது முதல்முறையல்ல. இதுபோன்ற மெயில்கள் அனைத்து சமூதாய மக்களுக்கும் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம்: ஜாமியா மாணவர்கள் திருப்பி அனுப்பிவைப்பு!