ஈரான் படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் அமெரிக்கா அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் பதற்றம் நிலவிவரும் இந்தச் சூழ்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவாத் ஷரீப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேற்று (ஜனவரி 14) இந்தியா வந்தடைந்தார்.
அவர் இன்று (ஜனவரி 15) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து நாளை (ஜனவரி 16), மத்திய கிழக்குப் பகுதிகளில் நிலவி வரும் அசாதாரண நிலை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் விவரிக்கவுள்ளார். பின் மும்பை செல்லும் அவர் தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, இன்று அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை சந்தித்துப் பேசினார். அதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட நிகழ்வுகள் மத்திய கிழக்குப்பகுதி குறித்து அமெரிக்காவின் தவறான சிந்தனையின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தங்கள் பார்வையில் விஷயங்களைப் பார்க்கிறார்கள். எங்கள் (மத்திய கிழக்கு) பகுதி மக்கள் கண்ணோட்டத்தில் பார்ப்பது இல்லை" என்றார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் இணைய சேவை!