ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிணை (ஜாமீன்) மறுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் (நவ.15) டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி, மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது.
அதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேக்தா ஆஜராகி, இந்த மனு (ப.சிதம்பரம் பிணை மனு) குறித்து நவம்பர் 26ஆம் தேதி பதிலளிப்பதாகக் கூறினார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனு குறித்து பதிலளிப்பதாகக் கூறிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேக்தா காஷ்மீர் வழக்கில் ஆஜராகச் சென்றதால், வழக்கு விசாரணையை நாளை வரை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மீதான வழக்கு - சாட்சிக்கு வந்த கிரிஜா வைத்தியநாதன்!