ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மத்திய நிதியமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் மீடியா மூலம் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக முதலீடுகளைப் பெற்றதாக, சிதம்பரத்தின் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.
சிதம்பரத்துக்கான ஜாமின் மனு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிதம்பரத்துடன் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவுள்ளனர். மேற்கண்ட அரசு அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டம், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
அத்துடன் சிதம்பரம் வெளிநாடுகளில் முறைகேடாக வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை தரப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது.
இதையும் படிங்க: 'நிழலில் இருந்து நிஜ அதிகாரத்திற்கு...' - மராட்டியத்தைப் புரட்டிய தாக்கரே அரசியலின் கதை