ETV Bharat / bharat

'இனி ஜம்மு-காஷ்மீரில் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாதென உணர்ந்ததால் அரசியலில் இருந்து விலகுகிறேன்' - ஷா ஃபைசல்! - ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம்

சிறப்பு நேர்காணல்: ஜம்மு-காஷ்மீரின் இன்றைய சூழலில் எதையும் செய்ய முடியாதென்பதை உணர்ந்தே அரசியல் களத்திலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக, முன்னாள் ஆட்சிப் பணியாளரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்க முன்னாள் தலைவருமான ஷா பைசல் ஈ டி.வி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இனி ஜம்மு-காஷ்மீரில் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியதென உணர்ந்ததால் அரசியலில் இருந்து விலகுகிறேன் - ஷா ஃபைசல்

author img

By

Published : Aug 13, 2020, 9:57 PM IST

கடந்த 2019 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் ஷா பைசல். ஜம்மு-காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட ஷா ஃபைசல் கடந்த 2009ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடைபெற்ற ஆட்சிப்பணித் தேர்வில் முதலிடத்தைப் பிடித்தவர். குறிப்பாக, ஆட்சிப்பணித் தேர்வெழுதிய முதல் காஷ்மீரியும் அவரே ஆவார்.

இத்தகைய புகழைப் பெற்ற ஷா ஃபைசல், கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதியன்று அவர் தனது ஐ.ஏ.எஸ் பதவியை காஷ்மீரில் நடைபெற்றுவரும் படுகொலைகளை எதிர்த்து ராஜினாமா செய்வதாக அறிவித்து, ஜம்மு- காஷ்மீரின் அரசியலுக்குள் நுழைந்தார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று ஜம்மு-காஷ்மீரின் நடைமுறையில் இருந்த சிறப்பு உரிமை 370-35ஏ சட்டப் பிரிவுகள் நீக்கம் செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட போது மற்ற முக்கிய அரசியல்வாதிகளைப் போலவே பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பைசலும் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 11 மாதங்களை சிறையில் கழித்த அவர், ஜூன் 3ஆம் தேதியன்று விடுதலையாகி வெளியே வந்தார். விடுதலையான பைசல் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகக்கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இது குறித்து நமது ஈடிவி பாரத் அவரிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை பதிவு செய்துள்ளது.

கேள்வி : அரசியல் பயணத்தைத் தொடங்கி வெறும் ஒரேயாண்டில் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு காரணம் என்ன? அப்படி என்ன தான் நேர்ந்தது ?

பதில் : கடந்த ஒராண்டாக சிந்தித்தே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். காலமும், கள சூழலும் மாறியுள்ளதாக நான் உணர்கிறேன். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட பல மாறுதல்கள், நிகழ்வுகள் தான் இந்த முடிவை நோக்கி என்னை தள்ளின. நான் உறுதியாக இதனை கடக்க விரும்புகிறேன்.

கேள்வி : ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகான காஷ்மீரின் சூழலில், பிரச்னைகளில் தேர்தல் அரசியலுக்கு எந்தவொரு இடமும் இருக்காது என கருதுகிறீர்களா ? எனவே இது உங்கள் முந்தைய பாத்திரத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா ?

பதில் : இல்லவே இல்லை. அங்கு இப்போதும், எப்போதும் தேர்தல் அரசியல் பங்கேற்பு பொருத்தமானதாகவே இருக்கும். இது ஒரு ஜனநாயக நாடு. முடிவில் மக்கள் இந்த தேர்தல் கள இடத்தை நோக்கியே வருவார்கள், பங்களிப்பை ஆற்றுவார்கள். ஆனால் மாற்றம் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளில் நான் எதையும் செய்ய முடியாது என கருதுகிறேன்.

இனி ஜம்மு-காஷ்மீரில் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியதென உணர்ந்ததால் அரசியலில் இருந்து விலகுகிறேன் - ஷா ஃபைசல்
'என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாதென உணர்ந்ததால் அரசியலில் இருந்து விலகுகிறேன்' - ஷா ஃபைசல்!

கேள்வி : சிவில் சேவையில் இருந்தபோதும் சரி, அரசியலில் இறங்கியபோதும் சரி பலருக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினீர்கள். இப்போது அவர்களின் நம்பிக்கைகள் சிதைப்பது போல அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறுகிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்வதாக உணர்கிறீர்களா ?

பதில் : சிவில் சேவையில் சேர விரும்பிய பல இளைஞர்கள் நான் அந்த பணியிலிருந்து விலகி வந்தபோதும் சரி, இப்போது அரசியலில் இருந்து விலகும்போதும் சரி நான் மிகவும் வேதனைப்படுகிறேன். அவர்களது நம்பிக்கையை அழித்ததாகவே உணர்கிறேன். நம்பிக்கை துரோகம் செய்ததாகவே குற்ற உணர்வு கொள்கிறேன்.

கேள்வி : கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட பல அரசியல்வாதிகள் 370ஆவது பிரிவை ரத்து செய்வது குறித்து பேசக்கூடாது என்று ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினர். இப்போது அரசியலில் இருந்து விலகும் உங்களைப் பார்த்தால் காஷ்மீரின் புதிய அரசியல் மற்றும் நிர்வாக ஒழுங்கோடு நீங்கள் சமரசம் செய்ததாகத் தெரிகிறது?

பதில்: பொது பாதுகாப்பு சட்டப்படி அப்படியான பத்திரத்தில் கையெழுத்து வாங்க முடியாது. நாங்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டோம்.

கேள்வி: உங்கள் ராஜினாமா இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நீங்கள் மீண்டும் சிவில் சேவையில் சேரப் போகிறீர்களா ? அல்லது கல்வியாளராக ஹார்வர்டுக்கு பறக்க முடிவெடுத்துள்ளீர்களா ?

பதில் : அது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது எனக்கு ஒரேயொரு சிந்தனை தான் உள்ளது. மீண்டும் அமைதியான நிலைக்குச் செல்ல வேண்டும். நான் எனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். நான் என் வாழ்க்கையில் பல சோதனைகளை கடந்து வந்திருக்கிறேன். அவையே என் ஆசிரியராக என்னை வழிநடத்துகின்றன. நிறைய படிப்பினைகள் கற்றுக்கொண்டேன். இனி தனிப்பட்ட என் வாழ்வை பார்க்க உள்ளேன்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.