குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை மக்களவையிலும் இன்று மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனால் வடகிழக்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்துள்ளது.
எட்டு ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகவும், மீதமுள்ள ரயில்கள் வேறு வழியில் மாற்றப்பட்டுள்ளதாகவி, வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை(டிசம்பர் 11), வடகிழக்கு மாணவர் அமைப்பான நெசோ 11 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் அஸ்ஸாமின் பல பகுதிகளில் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா படத்தை எரித்த மாணவர்கள்: அத்துமீறி நுழைந்த பாஜகவினர்..