ETV Bharat / bharat

வேளாண் பணியில் இறங்கிய சர்வதேச கால்பந்து வீராங்கனை! - சர்வதேச கால்பந்தாட்டம்

ராஞ்சி: சர்வதேச அளவில் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடிய வீராங்கனை ஒருவர் ஊக்கத்தொகை கிடைக்காமல், திருமணம் செய்துகொண்டு வேளாண் பணிகளைச் செய்துவருகிறார்.

ஜாலோ குமாரி
ஜாலோ குமாரி
author img

By

Published : Dec 14, 2020, 9:48 AM IST

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த ஜாலோ குமாரி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கால்பந்தாட்டப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பள்ளி, கல்லூரிகளில் பல போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடி உள்ளார்.

அப்படி அவர், பிரேசில், பிரான்ஸ், ருமேனியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவருக்கு முறையான ஊக்கத்தொகை கிடைக்காததால், வீட்டில் திருமணம் செய்துவைத்தனர். தற்போது அவர், தனது கிராமத்தில் உள்ள வேளாண் பணிகளைச் செய்துவருகிறார்.

இது குறித்து குமாரி கூறுகையில், "கால்பந்து எனது கனவாக இருந்தது. இதை நான் அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினேன், ஆனால் திருமணத்திற்குப் பிறகு அதைச் செய்ய முடியவில்லை. எனக்கு நிறைய கனவுகள் இருந்தன.

தற்போது அவை இருண்ட சூழ்நிலையில், மறைந்துவிட்டன. எனக்கு அரசு வேலை வழங்க, மாநில அரசு உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார். தற்போது அவர் தனது குழந்தைகள், கணவருடன் கால்பந்து விளையாடுகிறார்; கற்றும் கொடுக்கிறார்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: கேரளாவை புரட்டியெடுத்த பெங்களூரு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.