கர்நாடகாவில் சமீப காலங்களாக அதிகரித்துள்ள போதை பொருள் தொடர்பான வழக்குகளில் சிசிபி அலுவலர்கள் பலரை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக நடிகை ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போதை பொருள் தொடர்பான பல வழக்குகளை சிசிபி விசாரித்து வருவதால், அவர்களுக்கு உதவ புலனாய்வு பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " பல வழக்குகளின் சுமை சி.சி.பி மீது உள்ளதால், அதனை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதிகப்படியான அலுவலர்களை நியமிப்பது மட்டுமின்றி அனைத்து விதமான வசதிகளும் மலிவான வகையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும். எனவே அனைவரின் ஆலோசனையையும் கேட்கிறேன். ஊடகங்கள் என்ன சொன்னாலும் எந்த மூலையிலிருந்தும் வரும் தகவல்களையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
போதை மருந்து வழக்குக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. எல்லை மாநிலங்களிலிருந்து போதைப்பொருட்களைக் கடத்தப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பாக எல்லை மாவட்ட காவல் துறையை வழிநடத்துவோம். போதைப்பொருள் கையாளுதல் வழக்கின் விசாரணையில் உளவுத்துறையை காவல் துறையினரைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.