ETV Bharat / bharat

தபால் நிலைய தலைமையகத்தில் வைத்தியலிங்கம் எம்.பி., நேரில் ஆய்வு!

புதுச்சேரி: தபால் நிலைய தலைமையகத்தில் மக்களுக்கான சேவைகள் முறையாக கிடைக்கின்றனவா என்பது குறித்து புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் நேரில் ஆய்வு செய்தார்.

Inspection of Parliament Member Vaidyalingam at Post Office Headquarters
தபால் நிலையத் தலைமையகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் நேரில் ஆய்வு!
author img

By

Published : May 18, 2020, 6:48 PM IST

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 31ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் கரோனா வைரஸின் பரவல் குறைந்தளவில் உள்ளதால் அம்மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் துறையில் மக்களுக்கான சேவைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பதை புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் இன்று நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் தபால் துறை சார்பில் மக்களுக்கு தேவையான சேவைகள் தடை இல்லாமல் கிடைக்கின்றனவா என்று கேட்டறிந்தார். பொது மக்களிடத்தில் கரோனா குறித்து அச்சப்பட வேண்டாம், அத்தியாவசிய சேவைகள் வழங்கும் எந்த பொதுத்துறை நிறுவனங்களும் மூடப்படாது என உறுதியளித்தார்.

தபால் நிலையத் தலைமையகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் நேரில் ஆய்வு!

மேலும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் போன்றவற்றை பயன்படுத்தவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.