உலக அளவீடு மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின்படி, கரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையில், இந்தியா உலகளவில் நான்காவது மோசமான நாடாக மாறியுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று அதிக அளவில் பரவிவருகிறது. இதனால், மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 11,458பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் கரோனா தொற்றால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை 8,884ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தவறான காரியத்தையே மீண்டும் மீண்டும் செய்து, அதில் வெவ்வேறு பலன் கிடைக்கும் என நம்புகிறது" எனவும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பொருளாதார வீழ்ச்சியில் இந்தியாவில் ஏழைகள் அழிக்கப்படுவார்கள் என்றும்; நடுத்தர வர்க்க மக்கள் ஏழைகளாக மாறுவார்கள் என்றும், இந்த நாட்டை முழுவதும் முதலாளிகள் சொந்தமாக்குவார்கள் என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.