ஆந்திர பிரதேச மாநிலத்தின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களால் மனிதாபிமானமற்ற முறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த இரண்டு மாணவர்களும் அதீத சேட்டை செய்கின்றனர்; ஆகவே கயிற்றால் கட்டி வைத்துள்ளோம் என்று பதில் உரைத்துள்ளனர். இதுகுறித்த காணொலிக் காட்சிகள் ஆந்திராவின் ஊடகங்களில் வெளியானது.
இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் உரிய மாணவர்களின் பெற்றோர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தில் பள்ளி தாளாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவலர்கள் தரப்பில் கூறினர்.
இதையும் படிங்க: பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவகள் காயம்!