தொடர்ச்சியாக நான்காவது அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்குச் செல்ல நேரம் ஒதுக்கும் அளவுக்கு இந்திய உறவை முக்கியமாகக் கொண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. இந்தியா உறவில் பரந்த தொடர்ச்சியை நாங்கள் கண்டிருப்பது இருதரப்பு உறவுகளுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும் என்று டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை தொடங்கி இரண்டு நாள் பயணத்திற்காக இந்தியாவில் இறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ORF இல் உள்ள அமெரிக்க முன்முயற்சியின் இயக்குனர் ஜெய்சங்கர் கூறினார்.
ட்ரம்பின் பயணத்தின்போது பிராந்திய விஷயங்கள், உலகார்ந்த பிரச்சினைகள், வர்த்தக ஊக்குவிப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, அறிவுச் சொத்துகள், பயங்கர வாத எதிர்ப்பு மற்றும் இந்திய-பசிஃபிக் பிராந்திய விஷயங்கள் தொடர்பான இருமுனை உறவைப் பலப்படுத்தும் வர்த்தக உறவையும் குறுகிய வட்ட தூதுக்குழு இடையிலான பேச்சுவார்த்தை மூலமாக அமெரிக்காவுடனான தனது மூலோபாய(strategic) இணக்கத்தை வலுப்படுத்த இந்தியா எதிர்நோக்கியுள்ளது,
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து இராணுவ உபகரணங்கள் வாங்குவதை அதிகரித்துள்ளது. மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை இதன் மூலம் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஜெய்சங்கர், "இந்த விஜயத்தில் பாதுகாப்பு தொடர்பான இணக்கத்தைக் எதிர்பார்க்கலாம்" என்று கூறினார்.
நாங்கள் பணி மட்டத்திலும் மந்திரிகள் மட்டத்திலும் ஏராளமான சந்திப்புகளைக் கண்டிருக்கிறோம். கடந்த சில மாதங்களாக, அந்தக் சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் கனமான அறிவிப்புகள் வந்துள்ளன. சில நேரங்களில் உச்சிமாநாடு மட்டத்தில் மட்டுமே இத்தகைய பெரிய அறிவிப்புகள் வெளிவரும்.
ட்ரம்ப்பின் வருகையின் தனித்தன்மை குறித்து அவர் கூறுகையில், "முன்னதாக, இந்திய விஜயம் எப்போதும் பாகிஸ்தானுடன் இணைத்தே செய்யப்பட்டது. ஜனாதிபதி கிளின்டன் இரு இடங்களுக்கும் சென்றார், ஜனாதிபதி புஷ் இரு இடங்களுக்கும் சென்றார். கடைசியாக கடந்த பத்தாண்டுகளில் இந்த வடிவத்தில் ஒரு மாற்றத்தைக் கண்டோம் இப்போது இந்தியா அதன் தகுதியின் அடிப்படையில் நடத்தப்படுகிறது, பாகிஸ்தான் அதன் தகுதிக்கு ஏற்றாற்போல் நடத்தப்படுகிறது.
ஒரு தேர்தல் ஆண்டில் ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின் முக்கியத்துவம் குறித்து அவர், "ஜனாதிபதி ட்ரம்பின் பயணம் உள்நாட்டு-அரசியல் முக்கியத்துவம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள தனது ஆதரவாளர்களை ஈர்க்க இயலுமென அவர் நம்புகிறார். மேலும் இந்திய-அமெரிக்க சமூகம் வாக்காளர்கள் மட்டுமல்ல, கணிசமான எண்ணிக்கையில் நன்கொடையாளர்களும் கூட என்பதால் அவர்களைக் கவரமுடியும் என்று எண்ணுகிறார்."
சாத்தியமான வர்த்தக ஒப்பம் தொடர்பாக, ஜெய்சங்கர், "வர்த்தக விஷயத்தில் ட்ரம்புடன் வரும் குழுவினரைப் பார்த்து வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படாது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் இல்லாதது இது தொடர்பான அறிகுறியாகத் தெரிகிறது."
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் விஜயம் செய்தார், பின்னர் பராக் ஒபாமா 2010 ஆம் ஆண்டில் ஒரு முறை இந்தியாவுக்கு வந்தார், பின்னர் மீண்டும் 2015 ஆம் ஆண்டில் வந்தார்.
ட்ரம்பின் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாக இருப்பதால், ஆடம்பரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
நிச்சயமாக, அதிபர் ட்ரம்பின் வருகையின் காணொளியியல், குறிப்பாக அகமதாபாத், குஜராத்தில் நடைபெறும் முக்கிய பேரணி நிகழ்வு மற்றும் டெல்லியில் நடைபெறும் இருதரப்புக் கூட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்" என்று ஜெய்சங்கர் கூறினார்.
மெலனியா ட்ரம்புடன், அமெரிக்க ஜனாதிபதி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்து கிட்டத்தட்ட 36 மணி நேரத்தில் தனது பயணத்தைத் தொடங்குவார், அதன்பின்னர் ட்ரம்ப் 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய நகரத்தின் மோட்டேரா ஸ்டேடியத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்பார், அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தோன்றுவார்
ட்ரம்ப் பின்னர் புது தில்லிக்கு புறப்படுவதற்கு முன்பு தாஜ்மஹால் பார்க்க ஆக்ராவுக்கு வருவார். ராஷ்டிரபதி பவனில் ஒரு சடங்கு வரவேற்புக்குப் பிறகு, ட்ரம்ப் மகாத்மா காந்தியின் நினைவாலயமான ராஜ் கட்டையும் பார்வையிடுவார்கள்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் தேசிய தலைநகரில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் ட்ரம்பிற்கும் மோடிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்ட பின்னர், ட்ரம்ப் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துடனான சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்கா புறப்படுவார்.