சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்று மதியம் இன்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட சில நிமிடங்களில், பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 3.17 மணிக்கு அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பயணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அந்த விமானம், கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றது.