ETV Bharat / bharat

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை! - பிரித்வி 2 ஏவுகணை

போர்க்காலத்தில் 350 கி.மீ., தொலைவுள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் திறன் வாய்ந்த பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவின் பாலசோர் கடற்பகுதியில் இருந்து நேற்றும் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Indigenously developed Prithvi-II missile testfired

author img

By

Published : Sep 24, 2020, 11:20 AM IST

பாலசோர் (ஒடிசா): அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்குகளை தாக்கும் பிரித்வி ஏவுகணை-2ன் சோதனை வெற்றி பெற்றது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை நேற்று(செப்.23) சோதித்துப் பார்க்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 650 கி.மீ., வரை சென்று தாக்கும் ஷாகீன் 1 ஏவுகணையை முன்பு பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்தது.

இதற்குப் பதிலடியாக இந்தியாவும் அணு ஆயுதங்களை ஏந்தியபடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பிரித்வி 2 ஏவுகணையை ஏவி சோதனை செய்து வருகிறது.

350 கி.மீ., தொலைவுள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் திறன் வாய்ந்த பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவின் பாலசோர் கடற்பகுதியில் இருந்து நேற்றும்(செப்.23) ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாகவும் சில முறை இதுபோன்று பிரித்வி ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.