ETV Bharat / bharat

மீளும் பாதையில் இந்தியா : மெல்ல குறையும் வேலையின்மை விழுக்காடு - சி.எம்.ஐ.இ - இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ)

ஹைதராபாத்: கரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நாட்டின் வேலையின்மை விகிதம் மெல்ல முன்னேற்றம் கண்டுவருவதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) கருத்து தெரிவித்துள்ளது.

மீளும் பாதையில் இந்தியா : மெல்ல குறையும் வேலையின்மை விழுக்காடு - சி.எம்.ஐ.இ

author img

By

Published : Aug 6, 2020, 9:02 PM IST

கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து ஒட்டுமொத்த நாடும் போராடி வரும் சூழலில், அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முழு முடக்கம் காரணமாக இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வந்தது. இந்நிலையில், சுயாதீன பொருளாதார சிந்தனைக் குழுவான இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சி.எம்.ஐ.இ) அது குறித்த நிலையை அறிய விரிவான ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவில், "ஒட்டுமொத்த இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் நிலவிய வேலையின்மை விகிதம் 7.8 விழுக்காடு என அறிய முடிகிறது. ஜூலை மாதத்தில் 7.4 விழுக்காடாக நிலவுகிறது. இரண்டையும் ஒப்பிடும்போது. நான்கு விழுக்காடு குறைந்துள்ளது. அதாவது வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக நிலவிய சூழலில் இருந்து தற்போது நாடு வெகுவாக முன்னேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கோவிட்-19க்கு முன்பாக பிப்ரவரி மாதத்தில் ஒன்பது விழுக்காடாக இருந்த வேலையின்மை, ஜூலை மாதத்தில் 5.5 விழுக்காடாக குறைந்துள்ளது. நாடு தழுவிய அளவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் பிப்ரவரி மாதத்தில் 4.7 விழுக்காட்டிலிருந்து ஜூலை மாதத்தில் 4.4 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில், வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 8.1 விழுக்காடாக பதிவாகியுள்ளது. கரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 8.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதர முக்கிய மாநிலங்களான, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, கேரளா, ராஜஸ்தான், ஒடிசாவின் குறிப்பிட்ட காலப்பகுதியில் வேலையின்மை விகிதத்தில் கணிசமான வீழ்ச்சியை அந்தந்த மாநிலங்கள் எட்டியுள்ளன.

பிப்ரவரி மாதத்தில் 14.8 விழுக்காடாக இருந்த டெல்லியின் வேலையின்மை விகிதமும் ஜூலை மாதத்தில் 20.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மெட்ரோ நகரங்களில் பணியாற்றிவந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் தமது வேலைவாய்ப்பை இழந்த நிலையில் வாழ்வாதாரத்தை தொலைத்த அச்சத்தில் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். கடந்த ஐந்து மாதங்களில் வேலையின்மை குறைந்து மெல்ல பழையை நிலையை அடைந்து பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.