ETV Bharat / bharat

இந்திய அணுசக்தி துறையின் நோக்கங்களும் அதன் சவால்களும்! - அணு உற்பத்தி திறன்

அணு உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து செயலாற்றிவருகின்றன. 2031ஆம் ஆண்டுக்குள் அணு சக்தி திறனை 22,480 மெகா வாட்டாக அதிகரிப்பதை நோக்கமாக இந்தியா கொண்டுள்ளது. ஆனால், இதனை அடைவதில் நிறைய சவால்கள் உள்ளன.

அணுமின் நிலையங்கள்
அணுமின் நிலையங்கள்
author img

By

Published : Jul 21, 2020, 4:22 PM IST

கடந்த 13 ஆண்டுகளாக, பேச்சுவார்த்தை மேற்கொண்டதன் விளைவாக இந்திய, ஐரோப்பிய ஒன்றியம் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மற்ற நாடுகள் அணுசக்தி உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து அணுசக்தி திறனை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றன.

இந்திய அணுமின்துறை

இந்தியாவில் 6,780 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 22 வணிக அணுமின் நிலையங்கள் உள்ளன. இதனை இந்திய அணுசக்தி நிறுவனம் இயக்கிவருகிறது. மேலும், 9,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 12 அணுமின் நிலையங்களை கட்ட இந்தியா திட்டமிட்டுவருகிறது.

6,700 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஒன்பது அணுமின் நிலையங்கள் தற்போது கட்டப்பட்டுவருகின்றன. ஐந்து இடங்களில் 25,248 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையங்களை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அணுமின் சக்தி உற்பத்தி இலக்கு

6,780 மெகா வாட் அணுமின் உற்பத்தி திறனை 2031ஆம் ஆண்டுக்குள் 22,480 ஆக அதிகரிக்க திட்டம் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்.

மற்ற நாடுகளுடன் மேற்கொண்ட அணுமின் ஒப்பந்தங்கள்

2019ஆம் ஆண்டு வரை, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரிட்டன், ஜப்பான், வியட்நாம், வங்கதேசம், கஜகஸ்தான், தென் கொரியா, செக் குடியரசு போன்ற நாடுகளுடன் அணுமின் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது.

இந்திய அணுமின் துறையின் லட்சியங்களை அடைவதில் உள்ள சவால்கள்

அணுமின் திட்டங்களை முடிப்பதில் தாமதம்

இந்தியாவிவ் அணுமின் திட்டங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணுமின் சக்தியை உற்பத்தி செய்ய 30 ஆண்டுகள் ஆனது.

மற்ற அணுமின் நிலையங்களின் நிலை

மகாராஷ்டிரா கொங்கன் பகுதியில் 9,900 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட ஜெய்தாபூர் அணுமின் திட்டம் 2010ஆம் ஆண்டு தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இன்னும் தொடங்கவில்லை.

குஜராஜ் காக்ராபார், ராஜாஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள அணுமின் நிலையத்தில் இன்னும் உற்பத்தி தொடங்கவில்லை.

கூடங்குளத்தில் மூன்றாவது, நான்காவது யூனிட்கள் இப்போதுதான் கட்டப்பட்டுவருகின்றது.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை கட்ட திட்டமிட்டதை விட அதிக செலவாகிறது.

கூடங்குளத்தில் முதலாவது, இரண்டாவது யூனிட்களை அமைக்க 13,171 கோடி ரூபாயாகும் என கணக்கிடப்பட்டது. ஆனால், அது 2014ஆம் ஆண்டு 22,462 கோடி ரூபாயாக உயர்ந்தது.

உபகரணங்கள் விநியோகிப்பதில் தாமதம், வடிவமைப்பில் மாற்றம், கட்டமைப்பு பணிகளில் தாமதம் என பல்வேறு காரணிகள் உள்ளன.

அணுமின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்

தமிழ்நாடு: கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். கூடங்குளத்தில், 8,952 பேர் மீது தேச துரோக வழக்கும், நாட்டுக்கு எதிராக சதி செய்வதாக 11,000 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா: ஜெய்தாபூர் அணுமின் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரப் பிரதேசம்: 6,600 அணுமின் உற்பத்தி திறன் கொண்ட திட்டத்தை கோவாடா பகுதியில் தொடங்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கர்நாடகா: கைகா அணுமின் நிலையத்தில் கூடுதல் யூனிட்களை அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேற்குவங்கம்: ஹரிபூரில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு எதிராக மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக மாநிலங்களவை கொறடாவாக சிவ் பிரதாப் சுக்லா நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.