கரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் நசிந்துவரும் சூழலில், இந்தியா புதிய அந்நிய முதலீட்டு விதிமுறைகளைச் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த விதிமுறைகளின் படி, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்குக் கூடுதலாகக் கெடுபிடிகள் விதித்தக்கப்பட்டுள்ளன. இந்திய நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இந்தச் சூழலில், இந்தியாவின் இந்த நடவடிக்கை உலக வர்த்தக மையத்தின் (WTO) பாகுபாடற்ற சுதந்திர மற்றும் நியாய வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என சீனா விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக சீனத் தூதரக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "கூடுதல் கெடுபிடிகளுடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதிமுறைகள் உலக வர்த்தக மையத்தின் பாகுபாடற்ற சுதந்திர மற்றும் நியாய வர்த்தக கொள்கையை மீறுவதாக அமைந்துள்ளது. மேலும், ஜி-20 அமைப்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கும் இது எதிராக உள்ளது" என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!