ETV Bharat / bharat

இந்த ஆண்டு இந்தளவு பொருளாதர சரிவு நிச்சயம் - பொருளாதார வல்லுநர் உறுதி - பொருளாதார சரிவு

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் ஒருபுறம் அதிகரித்துவருகிறது. மறுபுறம் பொருளாதரத்தை விரைவில் மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. இந்நிலையில் 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சந்திரகலா சவுத்ரி ஈடிவி பாரத்திற்கு எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்..!

India's GDP growth
India's GDP growth
author img

By

Published : Aug 14, 2020, 4:37 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இருப்பினும், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்க மத்திய அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

ஏப்ரல், மே மாதங்களில் மிக மோசமாக இருந்த சில பொருளாராத குறியீடுகள், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளன.

இருப்பினும், ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தளர்வுகள் காரணமாக இந்திய பொருளாதாரம் வளர்கிறதா? அல்லது சரிகிறதா? கரோனா தொற்று தொடந்து அதிகரித்துவருவதால், ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகளும் சில மாநிலங்களில் அதிக கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன? ஜிடிபி வளர்ச்சி என்னவாக இருக்கும்?

பொருளாதாரம் சரிவில் இருந்து மீளத்தொடங்கிவிட்டது, ஆனால்...

கடந்த ஏப்ரல் மாதம் இருந்த மிக மோசமான பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டுவரத் தொடங்கிவிட்டதாகவே துறைசார்ந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தளர்வுகளால் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, சில மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் கடுமையாக்கியுள்ளன. இது கடந்த சில வாரங்களாக இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதித்தது.

இருப்பினும், இங்கு மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சர்வதேச அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலும், வாங்கும் திறன் அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் உள்ள இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசும் துறைசார்ந்த வல்லுநர்களும் பெரும் முயற்சி எடுத்துவருகின்றனர்.

முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் (ஐ.சி.ஆர்.ஏ) முதன்மை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், "கடந்த ஏப்ரல் மாதம் இருந்த மிக மோசமான பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டுவரத் தொடங்கிவிட்டது. ஊரடங்கு கடுமையாக இருந்தபேதே பல்வேறு துறைகளும் புதிய இயல்புநிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள தொடங்கிவிட்டன.

இருப்பினும், தளர்வுகளால் கரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக, பல மாநிலங்கள் ஊரடங்கை மீண்டும் கடுமையாக்கியுள்ளன. இது கடந்த சில வாரங்களாக இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதித்தது. இதை சில பொருளாதார வளர்ச்சி குறியீடுகள் தெளிவாக காட்டுகின்றன.

பொருளாதார சரிவு தொடரும்

தொற்றின் தீவிரம், பாதுகாப்பு நடைமுறைகளை முழுவதுமாக செயல்படுத்த ஆகும் காலஅவகாசம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்திய பொருளாதாரம் 2021ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுவரை சரியும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கின்றன. இது தொழிளாலர் தேவை, விநியோக சங்கிலி, மக்களின் நுகர்வு முறை ஆகியவற்றை பாதிக்கும் என்பதால் நாடு முழுவதும் சீரற்ற ஒரு வளர்ச்சி இருக்கும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பொருளாதார சரிவில் இருந்து மீண்டு, ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சியை அடைய 2021ஆம் நிதியாண்டின் மூன்று அல்லது நான்காம் காலாண்டு வரை ஆகலாம். இந்த வளர்ச்சியை அடைய அதற்குள் தடுப்புமருந்து கண்டுபிடிக்கபட்டாக வேண்டும். ஏனென்றால், சுற்றுலா, போக்குவரத்து, சொகுசு விடுதிகள் உள்ளிட்ட துறைகள் மீண்டும பழையபடி இயங்க தடுப்புமருந்து கட்டயமாகும்.

விவாசாய துறையில் வளர்ச்சி, கிராமப்புற நுகர்வு ஆகியவற்றைதான் நாங்கள் நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் கண்காணித்துவருகிறோம். 2021ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 விழுக்காடு வரை சரிவைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

பொருளாதாரத்தை காக்கும் கிராமங்கள்

கிரமப்புறங்களில் கரோனா தொற்றின் தாக்கம் குறைவாகவே உள்ளது. நகர்ப்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிரமப்புறங்களில் தேவைகள்(demand) விரைவாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. ஒட்டுமொத்த பொருளாதார மந்தநிலையை விவசாய துறையின் வளர்ச்சி ஒரளவு சரி செய்யும்.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் விவசாய உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பில் புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், பிரதமரின் கிஷான் திட்டத்தின்கீழ் 8.5 கோடி விவசாயிகளின் கணக்குகளில் ஆறாவது தவணையாக ரூ .17,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் தேவைகள்

இந்திய பொருளாதாரம் குறித்த நம்பிக்கைக்குறிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ள பொருளாதார வல்லுனர் ஆகாஷ் ஜிண்டால், "இந்தியப் பொருளாதாரம் மீண்டுவரும் சக்தியைக் கொண்டுள்ள ஒரு பொருளாதாரம். பெரும் கனவுகளை கொண்ட நடுத்தர வர்க்கம் நம்மிடம் உள்ளது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு என்பது மெதுவாகவுள்ளது, கரோனா குறித்த பயம் இன்னும் இங்கு உள்ளது, இருப்பினும் தேவை என்பது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.

ஏப்ரல், மே மாதங்களில் அடிப்படை பொருள்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நமக்கு சவுகரியம் அளிக்கும் பொருள்கள், ஆடம்பர பொருள்கள் ஆகியவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது.

தேவை முற்றிலும் மீண்டுவிட்டது என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது. இருப்பினும், இதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்கிவிட்டன. தீபாவளிக்கு பின் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை அடையும். ஏனென்றால், அந்த காலகட்டத்தில்தான் இங்கு திருமண சீசன் தொடங்குகிறது, இதனால் தேவையும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கும். இந்திய பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், இதன் மூலம் இந்தியாவில் தேவையும் கணிசமாக அதிகரிக்கும்.

பொதுமக்கள் மீண்டும் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளதால் ஆட்டோமொபைல் மற்றும் ஆடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல வீட்டிலிருந்தபடி செய்யும் முறை அதிகரித்துள்ளதால் லேப்டாப், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை வாங்க பொதுமக்கள் தற்போது ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்தத் துறைகள் மீள அதிக காலம் தேவை

இந்த துறைகள் பாதிப்புகளில் இருந்து மீண்டுவரத் தொடங்கிவிட்டன. இருப்பினும், சுற்றுலா, விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் கரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டுவர அதிக காலம் பிடிக்கும். ஆனால், தற்போது ஒரு நல்ல முறையில் நாம் பயணிக்கத் தொடங்கியுள்ளோம். 2021ஆம் ஆண்டின் இறுதியில் செல்லிக்கொள்ளும்படியான ஒரு வளர்ச்சியை இந்தியா அடையும்.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போல மிகப் பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பொருளாதார மீட்டெடுப்பு என்பது விரைவாக இருக்கும். ஏனென்றால், இந்தாண்டு நமது ஜிடிபி ஐந்து விழுக்காடு வரை மட்டுமே குறையும். இதன் காரணமாக பொருளாதாரம் விரைவில் மீண்டெழும்.

என்னைப் பொறுத்தவரை 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது நேர்மறையாக இருக்கும். ஏனென்றால், தீபாவளிக்குப் பின் நுகர்வோரின் தேவை அதிகரிக்கும் என்பதால் தொழிற்துறை வளர்ச்சி பெறும்.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்தால் பொருளாதாரமும் உயரும். தேவையும், நுகர்வும் விரைவில் அதிகரிக்கும். 2020-21ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஐடி துறை ஒரு முக்கிய வளர்ச்சியை பெறும். இதனால் 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய ஒரு வளர்ச்சியை அடையும் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.

உலகளாவிய உற்பத்தி, விநியோகச் சங்கிலி மற்றும் வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் இந்த கரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு பல்வேறு நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தியாவில் நேரடி வரிகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் வகையில் தற்போது 'நேர்மையான தளத்தை கவுரவிக்கும் வெளிப்படையான வரிவிதிப்பு' தொடங்கப்பட்டுள்ளது இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதையும் படிங்க: திருமணம் செய்து கொள்பவர்கள் நிதிநிலைகளை எவ்வாறு கையாள வேண்டும்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.