ETV Bharat / bharat

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன?

author img

By

Published : Jan 29, 2021, 5:46 PM IST

டெல்லி: 2020-21 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.7 விழுக்காடு சுருங்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிப்ரிவரி 1ஆம் தேதி, நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில், 2020-21 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல்செய்தார். அதில், மோசமான சூழ்நிலை நிலவும்பட்சத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 விழுக்காடு அளவுக்குச் சுருங்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்த தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் இது குறித்து மேலும் கூறுகையில், "2020 நிதியாண்டுக்கான அரசின் கடன் தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 73.8 விழுக்காடாக உள்ளது. 2021 நிதியாண்டுக்கான முதன்மை நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 6.8 விழுக்காடாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், 2022 நிதியாண்டுக்கான முதன்மை நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 2.5 விழுக்காடாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2024 நிதியாண்டுக்குள் முதன்மை நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 1.5 விழுக்காடாக குறைய வாய்ப்புள்ளது. அதன்பிறகும்கூட, 1.5 விழுக்காடாகவே தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 6 விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பண வீக்கம் 5 விழுக்காடாக இருக்கும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.