அருகில் சில்லென்று பாயும் அருவி, கால்களை நனைத்து ஓடும் நதி என அற்புத சூழலில் உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பவர்களுக்காகவே திறக்கப்பட்டிருக்கிறது இந்த புதிய உணவகம்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள இந்த ப்ரூக் ஸ்டோனி (Brook Stony) என்ற உணவகம், அக்டோபர் மாதம் 3ஆம் தேதி திறக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 250 நபர்கள் வரை அமர்ந்து உணவு உட்கொள்ளலாம்.
இதுகுறித்து இதன் உரிமையாளர் வினய் தான் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது இதுபோன்ற ஒரு நீர்வீழ்ச்சி உணவகத்திற்குச் சென்றதாகவும், அதேபோல் ஒரு உணவகத்தை பெங்களூருவில் தொடங்க வேண்டும் என்று அப்போதே தனக்கு ஆசை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உணவகத்தில் ஸ்ட்ரீம் சீட்டிங், காலின் கீழ் நீர் செல்லும் வகையில் சீட்டிங், ரூப் டாப் சீட்டிங் என பலவகை சீட்டிங் வசதியும் உள்ளது. மேலும், இங்கு சீனா, ஜப்பானிய, இந்தோனேசியா, இத்தாலிய உணவு வகைகள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: மரங்களை வெட்டுவதற்கு ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்!