ETV Bharat / bharat

இந்தியாவின் முதல் விவசாயி ரயில் நாளை முதல் இயக்கம்!

author img

By

Published : Aug 6, 2020, 8:13 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்த வேளாண் பொருள்களுக்கான சிறப்பு விவசாயி ரயில் நாளை முதல் இயக்கப்படவுள்ளது.

indias-first-kisan-rail-to-run-from-maharashtra-bihar-will-begin-services-from-friday

எளிதல் அழுகக்கூடிய பொருள்களான பூ, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொண்டுசெல்வதற்கான விவசாயி ரயில் இந்த ஆண்டு முதல் இயக்கப்படும் என பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்தத் திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

விவசாயிகளுக்கான முதல் பிரத்யேக ரயில் மகாராஷ்டிராவின் தேவ்லாலியிலிருந்து பிகாரின் தனாப்பூர் வரை செல்லவுள்ளது. இந்த ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளனர்.

நாளை காலை 11 மணிக்கு தேவ்லாலியிலிருந்து புறப்படும் விவசாயி ரயில் மறுநாள் மாலை 6.45 மணிக்கு தனாபூரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரத்து 519 கிலோமீட்டர் தூரத்தை 31.45 மணி நேரத்தில் கடக்கும் என ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எளிதில் அழுகக்கூடிய பொருள்களுக்காக பிரத்யேக ரயில் இயக்கம் தொடங்கப்படும் என பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கேற்ப இந்தியாவின் முதல் விவசாய ரயில் தேவ்லாலி முதல் தனாபூர் வரை வாரந்தோறும் செல்லவுள்ளது.

செண்ட்ரல் ரயில்வேயின் பூசாவால் பிரிவு விவசாயத்தை மையமாகக் கொண்ட பிரிவு. நாசிக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான நல்ல தரத்தில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகிய வேளாண் சார்ந்த பொருள்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை பாட்னா, அலகாபாத், கட்னி, சாட்னா பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படும்.

இந்தச் சிறப்பு விவசாயி ரயில் நாசிக், மன்மத், ஜல்கயான், புர்ஹான்பூர், கந்த்வா, இதர்சி, ஜபல்பூர், சாட்னா, கட்னி, மாணிக்பூர், பிரயக்ராஜ், பக்சார் ஆகிய வழித்தடங்களில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய பிரதமர் மோடி - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.