கரோனா பெருந்தொற்றை இந்தியா தீவிரமாக எதிர்கொண்டுவரும் நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசுகையில், இந்திய மக்கள் கரோனாவை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
நாட்டு மக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் தங்களின் அபார பங்களிப்பை அளித்துவருகின்றனர். வர்த்தகர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் மாற்றத்தை ஏற்று தொடர் பங்களிப்பை அளித்துவருகின்றனர்.
மனித நேயத்தை போற்றும் இந்தியா, உலக நாடுகளுக்கு தேவையான மருந்துகளை அளித்து உதவியது. இந்தியா மீதும், இந்திய மக்களின் மீதும் உலக நாடுகளின் தலைவர்கள் நம்பிக்கை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுகளின் பங்களிப்பு சிறப்பானவை. இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டன எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் இதுவரை 26 ஆயிரத்து 496 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 824 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துங்கள்; மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்