மக்களவையில், மத்திய ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் ரயில்வேவுக்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பாக பேசுகையில்,,' ரயில்வே துறையைத் தனியாரிடம் கொடுக்கும் கேள்விக்கே இடம் இல்லை. ஆனால் நாட்டின் நலனுக்காக ரயில்வேயின் வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றால் முதலீடுகள் கண்டிப்பாகத் தேவைப்படும். எனவே பொதுமக்களையும் தனியார் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் விதமாக ரயில்வேயின் சில பிரிவுகள் மட்டும் தனியார் மயம் ஆக்கப்படும். மேலும் ரயில்வே டிராக் கிலோமீட்டர்கள் 1950-2014 காலகட்டத்தில் 77,609 கிமீ முதல் 89,919 கிமீ வரை அதிகரிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,23,236 கிமீ ஆக டிராக் கிலோமீட்டர்கள் உயர்ந்துள்ளது .
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரேபரேலி நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஒரு பெட்டிக்கூட தயாரிக்கப்படவில்லை. அதனால் அதன் ஒரு பகுதி தனியார் மயம் ஆக்கப்படும் என்றார்.