கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்போது சரக்கு ரயில்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கூடுதலாக 80 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
நாளை (செப்.12) முதல் இயக்கப்படவுள்ள இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று (செப்.10) தொடங்கியது.
இந்நிலையில், இந்த 80 சிறப்பு ரயில்களில் பயணிக்க ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவரும் சூழலில், தற்போது கூடுதலாக இந்த 80 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'மே மாதமே இந்தியாவில் 64 லட்சம் பேருக்கு கரோனா' - அதிர்ச்சியளிக்கும் ஐஎம்சிஆர் முடிவுகள்