அரசின் மருத்துவ திட்டங்கள் இன்றளவும் பல மக்களுக்கு சென்றடையைாத நிலையில்தான் உள்ளன. அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலை குறித்து நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
மக்களின் மருத்துவ செலவுக்கு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா குறைவாக செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் மருத்துவ திட்டங்கள் நிர்வாக நடைமுறைக்கு சாத்தியமற்ற முறையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம் மூலம் மக்கள் தொகையில் 40 விழுக்காடு மக்கள் பயனடைகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தில் எவ்வளவு செலவு? உள்துறை அமைச்சகம் பதில்