இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கரோனா பரவலைத் தடுக்க இந்திய அரசு முன்னெடுத்த ஊரடங்கின் காரணமாக உள்நாட்டில் நிகழ்ந்த மனிதவள இடப்பெயர்வுகள், வேலைவாய்ப்பு இழப்புகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் இந்த நிதியாண்டில் (2020-2021) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இறுதியில் எதிர்மறையான அளவிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு, நான்காவது காலாண்டு ஆகியவை மிகவும் கூர்மையான வி வடிவ மீட்சியைக் கொண்டதாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அடிப்படையில் எதுவும் நடக்காது அல்லது நடக்கும் சூழலும் ஏற்படாது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நிதியாண்டும் எதிர்மறையான பாதையிலேயே முடிவடையும். உலகளாவிய பொருளாதார மந்தநிலை அடுத்த நிதியாண்டிலும் தொடரலாம்.
2022-23ஆம் நிதியாண்டே அப்போதைய பொருளாதார விரிவாக்கம் வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் நிலையானதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். அதேபோல, நிதியாண்டின் முதல் காலாண்டு, இரண்டாம் காலாண்டு ஆகியவை மிக உயர்ந்த செயல்திறன் கொண்டதாக இருக்காது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20ஆம் ஆண்டில் 4.2 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் நடப்பு ஆண்டிற்கான வளர்ச்சிக் கணிப்புகள் இந்தியப் பொருளாதாரம் - 9.5 விழுக்காடு வரை வீழ்ச்சியை குறிக்கின்றன.
மிக அண்மையில் உள்நாட்டுப் பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறுக்குவதற்கான முன்னறிவிப்பை முந்தைய 5 விழுக்காட்டிலிருந்து 9.5 விழுக்காடாகத் திருத்தியுள்ளது.
இந்தியாவின் கடன் 2019-20 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 விழுக்காடாக இருந்தது, நடப்பு நிதியாண்டில் இது 80 விழுக்காட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.