கர்நாடக மாநிலம் பலால் பாக் அருகேயுள்ள பகுதியில் காட்டெருமை ஒன்று இன்று காலை ஆறு மணியளவில் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காட்டெருமை உலா வருவதை வீடியோ, புகைப்படம் எடுத்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், மயக்க ஊசியைச் செலுத்தி காட்டெருமையைப் பிடித்தனர்.
ஊரடங்கினால் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மனித நடாமட்டம் குறைந்துள்ளதால் காட்டெருமை நகரத்துக்குள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்பின்னர், மயக்க ஊசி செலுத்தி பிடித்த காட்டெருமையை பிலிகுலா உயிரியல் பூங்காவில் விட்டனர்.
இதையும் படிங்க: விஷம் வைத்து புலிகளை கொன்ற வழக்கில் இருவர் கைது