ETV Bharat / bharat

'வான்வழி கண்காணிப்பு': பிரத்யேக செயற்கைக்கோளை ஏவுகிறது இந்திய ராணுவம் - வான்வழி கண்காணிப்பு இந்திய பாதுகாப்புப் படை

டெல்லி: தேச பாதுகாப்புக்காக இந்திய ராணுவம் தயாரித்துள்ள புதிய செயற்கைக்கோளின் முக்கிய அம்சங்கள் குறித்து மூத்த ஊடகவிலாளர் சஞ்சய் கே. பவுரா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Army
Army
author img

By

Published : Feb 6, 2020, 11:28 AM IST

எல்லைக்கு வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள், ஊடுருவல்களை கண்காணிக்கவும், உள்நாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு உதவவும் இந்திய ராணுவம், அடுத்த கட்டமாக தனது பயன்பாட்டுக்காக பிரத்யேக செயற்கைக்கோளை ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணில் இருந்து தொலை தூரத்தில் உள்ள இடங்களை மிகத் தெளிவாக படம் பிடிக்கும் திறன் படைத்த இந்த செயற்கைக்கோள், இந்திய ராணுவத்துக்கு பேருதவியாக அமையும் என, இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அலுவலர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தின் தகவல் தொடர்பு, தொலை தூர கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் பணிகளில் இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றும். ஆளில்லா விமானங்களின் நடமாட்டத்தையும் இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நமது தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்காகவும், ரகசியம் காக்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் இந்த செயற்கைக்கோளை ராணுவம் பயன்படுத்த உள்ளது. இதை ராணுவத்தின் மின்னணு கண்காணிப்பு இயக்குநரகம் கையாளும்.

வானில் இருந்து இந்தியாவின் எல்லையில் கண்வைத்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் இந்த செயற்கைக்கோள், எல்லை தாண்டி வரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை நமது ராணுவத்துக்கு எளிதில் காட்டிக் கொடுத்து விடும்.

மேலும், எல்லைப் பகுதியில் இந்தியப் படைகளை எங்கெங்கு குவிக்க வேண்டும் என்பதுடன் அவற்றின் நடமாட்டத்தையும் இந்த செயற்கைக்கோள் மூலம் எளிதில் கண்காணிக்க முடியும். எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய ராணுவ முகாம்கள் மற்றும் பதற்றமான பகுதிகளையும் இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும்.

தற்போதைக்கு இந்தியாவின் 55 செயற்கைக்கோள்கள் விண்ணில் சுற்றி வருகின்றன. இதில் 8 முதல் 10 செயற்கைக்கோள்கள் ராணுவத்துக்கு பயன்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் ராணுவத்துக்கென பிரத்யேக செயற்கைக்கோள்கள் ஏவப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 34 நாடுகளின் 327 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. இதில் 2017 பிப்ரவரி 15-ல் 104 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி 37 திட்டம் மிகப் பெரிய சாதனையாகும்.

2019 நவம்பரில் ஏவப்பட்ட கார்டோ சாட் - 3 செயற்கைக்கோள், விண்ணில் 500 கி.மீ. அப்பால் இருந்து, பூமிப் பரப்பில் உள்ள 25 செ.மீ. அளவுக்கும் குறைவான சிறு பொருட்களைக் கூட துல்லியமாக படம் பிடிக்கும் திறன் படைத்தது. இதுவே இந்திய செயற்கைக்கோள் படைத்த அரிய சாதனை.

2019 ஏப்ரலில் இஸ்ரோ ஏவிய எமி சாட் செயற்கைக்கோள், பூமியின் பரப்பில் மின்னணு சமிக்ஞைகளை துல்லியமாக கண்டறியும் திறன் படைத்தது. இதன்மூலம் எதிரிகளின் ரேடார் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் இதன் கண்ணில் இருந்து தப்ப முடியாது. மற்றொரு செயற்கைக்கோளான மைக்ரோசாட் ஆர், இரவிலும் தெளிவாக படம் பிடிக்கக் கூடியது.

இந்திய கடற்படையும் ஏற்கனவே தனது பயன்பாட்டிற்காக ருக்மினி என்ற பெயரில் செயற்கைக்கோளை ஆகஸ்ட் 2013ல் செலுத்திய நிலையில், இந்திய விமானப்படையும் ஜிசாட்-7 ஏ என்ற செயற்கைக்கோளை 2018 டிசம்பரில் ஏவியுள்ளது.

இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகமும் சொந்தமாக செயற்கைகோளை ஏவுவதற்கான யோசனையை முன்வைத்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை(BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை ( CRPF) போன்ற தன் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப் படைகளுக்கு உதவும் வகையில் இந்த செயற்கை கோள் ஏவும் திட்டத்தில் உள்ளது.

தீவிரவாதம், ஆயுதம் ஏந்தி போராடும் தீவிர இடதுசாரி நக்சல் இயக்கங்களை ஒடுக்குவதற்கு செயற்கைக்கோள் பேருதவியாக இருக்கும் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது. உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் பரிந்துரை செய்யப்பட்டதின் பேரில் நீண்ட காலம் செயல்படக்கூடிய செயற்கைக்கோளை ஏவுவது குறித்து உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அந்த அலுவலர் தெரிவித்துள்ளார்.

இப்படி ராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்கைக்கோள்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தப்படும் பட்சத்தில், இந்தியாவின் 24 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான லட்சிய திட்டமான NFS எனப்படும் ஸ்பெக்ட்ரம் நெட்வொர்க் திட்டத்தின் லட்சியம் நிறைவேறும். இதன் பிரதான நோக்கமான, நாட்டின் பல்வேறு படைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில் அதிமுக்கிய உளவுத் தகவல்கள் மற்றும் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்.

குரல் பரிமாற்றம், காணொலி, முக்கிய தகவல்கள் பரிமாற்றம் போன்றவற்றில் மட்டுமின்றி இந்த ஸ்பெக்ரம் நெட்வொர்க் திட்டமானது அடுத்த தலைமுறைக்கான தகவல் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் என அனைத்து பயன்பாடுகளையும் ஒன்றிணைக்கும் என்பது நிச்சயம்.

இதையும் படிங்க: 'ரஜினிக்கு முன்பு நாங்கள்தான்’ - அமைச்சர் ஜெயக்குமார் பிடிவாதம்!

Intro:Body:

Indian Army Satellite

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.