கடந்த சனிக்கிழமையன்று சேலா பாஸ் என்னும் மலைப் பகுதியில் 14,000 அடி உயரத்தில் கடும் பனியில் மாட்டிக்கொண்ட 390 பொதுமக்களையும், 175 வாகனங்களையும் இந்திய ராணுவம் மீட்டது.
மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியும் சூடான உணவும் வழங்கப்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்டவர்கள் இந்திய ராணுவத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த மீட்புப் பணி சுமார் 16 மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... 'நானே முதலமைச்சர் வேட்பாளர்!' - பிகாரில் பரபரப்பை கிளப்பிய விளம்பரம்