ETV Bharat / bharat

இராங் பாலத்தை புனரமைத்த ராணுவம்!

தேஜ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் தமெங்லாங் மாவட்டத்தின் தவுபாம் கிராமத்தில் அமைந்துள்ள இராங் பாலத்தின் புனரமைப்புப் பணிகளை இந்திய ராணுவம் நிறைவு செய்தது.

author img

By

Published : Dec 3, 2020, 9:03 AM IST

இராங் பாலத்தை புனரமைத்த ராணுவம்!
இராங் பாலத்தை புனரமைத்த ராணுவம்!

அஸ்ஸாம் மாநிலம், தேஜ்பூரையும் மணிப்பூரையும் இணைக்கும் மிக முக்கியமான பாலம் இம்பால் மற்றும் ஜிரிபாம் இடையே தேசிய நெடுஞ்சாலை-37யில் அமைந்துள்ளது.

இந்தப் பாலம் நவம்பர் ஒன்றாம் தேதி இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் பயணித்துக்கொண்டிந்த மணல் லாரி இராங் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த முக்கியமான சாலை துண்டிக்கப்பட்டதால், உள்ளூர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இந்தப் பாலத்தின் மறு கட்டுமானப்பணியை இந்திய ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸின் சிறப்பு பொறியாளர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலத்தின் மறு கட்டுமானப் பணிகள் நவம்பர் 09 அன்று தொடங்கியது. புதிய பெய்லி பாலம் அமைப்பதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் தேஜ்பூரிலிருந்து பார்டர் ரோட்ஸ் அமைப்பால் வழங்கப்பட்டன. இந்தப் புதிய பாலத்தின் கட்டுமானப்பணி நவம்பர் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் பொது போக்குவரத்துக்காக இந்த பாலத்தை புதன்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் , "இந்திய ராணுவம் மற்றும் என்.எச்.ஐ.டி.சி.எல். இந்த கடினமான சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பான பணியை செய்துமுடித்துள்ளனர். ராணுவ வீரர்களின் திறமை, வேகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்"எனக் கூறினார்.

இதையும் படிங்க: தொடரும் போராட்டம்: விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.