இந்திய-சீன இடையே சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவிவருவதால் இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை குவித்துவைத்துள்ளன. லடாக்கில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலுக்குப் பின் ராணுவ தளபதிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், கிழக்கு லடாக்கில் உள்ள தேம்சோக் பகுதியில் உள்ள இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துள்ளார். அவரைப் பாதுகாப்பாக பிடித்து வைத்துள்ள இந்திய ராணுவம், மருத்துவ உதவிகள், உணவு, சூடான கம்பளி ஆகியவற்றை அளித்து பேணிவருகிறது.
சீனத் தரப்பில் தொலைந்துபோன வீரரை திரும்பத் தருமாறு கோரிக்கை வைத்துள்ள நிலையில், முறையான நடவடிக்கைகள் முடிந்தபின்னர், அவர் சுசூல் மோல்டோ பகுதியில் உள்ள சீன அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவார் என ராணுவத் தரப்பு கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஊழல் புகார்: பாரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை!